Home » மன்னாரிற்கு பிரதமர் விஜயம்

மன்னாரிற்கு பிரதமர் விஜயம்

by newsteam
0 comments
மன்னாரிற்கு பிரதமர் விஜயம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (12) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்து இன்று மதியம் நானாட்டான் பிரதான மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இடம்பெற்றது.இதன் போது தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மா.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து உரை நிகழ்த்தினர்.இதன் போது பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.பிரதமரின் நானாட்டான் பகுதிக்கான விஜயத்தையொட்டி நானாட்டான் பகுதியில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!