Home » மியான்மரில் அனர்த்த நிவாரணப் பணிகளில் இலங்கை முப்படைப் படையினர் மும்முரம்

மியான்மரில் அனர்த்த நிவாரணப் பணிகளில் இலங்கை முப்படைப் படையினர் மும்முரம்

by newsteam
0 comments
மியான்மரில் அனர்த்த நிவாரணப் பணிகளில் இலங்கை முப்படைப் படையினர் மும்முரம்

மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அனர்த்த நிவாரண மீட்புப் பணிகளுக்கு உதவ அனுப்பப்பட்ட, முப்படைப் வீரர்களைக் கொண்ட சிறப்பு மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு, மியான்மரில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.அதேயன்று யங்கோன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை குழுவினர் யங்கோனிலிருந்து 450 கி.மீ தொலைவிலுள்ள பாதிக்கப்பட்ட பகுதியான Nay Pyi Taw மாகாணத்தில் நிலைகொண்டு அங்கிருந்து திங்கட்கிழமை (ஏப்ரல் 7), அந்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் இரண்டு நடமாடும் மருத்துவ முகாம்களை நடத்துவதற்காக அவர்கள் Pobba Thiri நகரத்திற்கு அனுப்பப்பட்டனர்.

Pobba Thiri யில், அவசர மருத்துவத் தேவைகளைக் கண்டறிய சூழ்நிலை மதிப்பீட்டை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. பிரதானமாக அத்தியாவசிய சுகாதாரப் தேவைகளை வழங்குதல், காயங்களுக்கு சிகிச்சை அளித்தல் மற்றும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவற்றில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கைப் நிவாரண குழுவினரின் தொழில்முறை மற்றும் மனிதாபிமான சேவைக்கான அர்ப்பணிப்பு மற்றும் சேவை பாராட்டுக்குட்பட்டுள்ளதுடன் அவசர காலங்களில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமைக்கான இலங்கையின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் அமையும்.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு இந்தப் குழுவினரின் நிவாரண பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் தேவைப்படுபவர்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள உதவிகளை வழங்குவதற்கான படைப்பிரிவின் திறனில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அதன் முழு ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மரில் அனர்த்த நிவாரணப் பணிகளில் இலங்கை முப்படைப் படையினர் மும்முரம்
மியான்மரில் அனர்த்த நிவாரணப் பணிகளில் இலங்கை முப்படைப் படையினர் மும்முரம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!