முல்லைத்தீவு முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் வழக்கு இன்றையதினம் (19) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.வழக்கு தொடர்பாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் சேர்ந்து 11 பேர் அடங்கிய சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகிய பின்னர் காணாமல்போன குடும்பஸ்தர் முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.குறித்த சம்பவம் தொடர்பாக நான்கு இராணுவத்தினர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது மேற்படி உத்தரவை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டார்.