Home » முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

by newsteam
0 comments
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மே மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.
பின்னர், முன்னாள் அமைச்சரை கல்கிஸ்ஸ பதில் நீதவான் முன்னிலையில் கடந்த 19ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!