Home » யாழில் பேருந்து மிதிபலகையில் பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழில் பேருந்து மிதிபலகையில் பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு

by newsteam
0 comments
யாழில் பேருந்து மிதிபலகையில் பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு

பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (28) உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் புலோப்பளையை சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் (வயது 26) எனும் இளைஞனே உயிழந்துள்ளார்.கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்துள்ளார்.
இதன் போது, கரந்தாய் பகுதியில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.இந்நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!