Home » யாழ் கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலை பெயர் மாற்றம் குறித்து கலந்துரையாடல்

யாழ் கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலை பெயர் மாற்றம் குறித்து கலந்துரையாடல்

by newsteam
0 comments
யாழ் கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலை பெயர் மாற்றம் குறித்து கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என செய்வதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நாளைய தினம் (12) காலை 10 மணிக்கு பெயமாற்றம் தொடர்பிலான கலந்துரையிடலும் , பாடசாலை அபிவிருத்தி சங்க விசேட கூட்டமும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலையின் பெயரை மாற்றுவது குறித்து ஜே – 112 கிராம சேவையாளர் பிரிவின் முதியோர் நலன்புரி சங்கத்தினால் , கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி வடமாகாண கல்வி அமைச்சுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டதுடன் , அதன் பிறந்து வடமாகாண ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.யா / கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், யா / கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலை 1930ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன் ஆரம்ப பெயர் அறிய முடியாத நிலையில் 1962ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பாடசாலை சுவீகரிக்கப்பட்டதன் பின்னர், எமது அயல் ஊரான கல்வியன்காடு பெயருடன் பாடசாலை பெயர் அமையப்பெற்றதாக கூறப்படுகிறது.எமது பாடசாலை அமைந்துள்ள காணி நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில். காணியின் உறுதியில் நல்லூர் கோவில்பற்று , நல்லூர் இறை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.உறுதிகளில் இறை என குறிப்பிடப்பட்டுவது அந்த காணி அமைந்துள்ள ஊரின் அல்லது கிராமத்தின் பெயரே. அதன் அடிப்படையில் பாடசாலை அமைந்துள்ளது நல்லூர் கிராமத்தில், அத்துடன் இந்த காணியின் அமைவிடம் நல்லூர் பிரதேச செயலக ஆளுகைக்கு உட்பட்டது.கல்வியன்காடு என்பது எமது அயல் கிராமம். அந்த கிராமம் வலி. கிழக்கு பிரதேச சபையின் கோப்பாய் பிரதேச செயலகத்தின் ஆளுகைக்கு உட்பட்டது.எமது பாடசாலை நல்லூர் பிரதேச சபை மற்றும் நல்லூர் பிரதேச செயலக ஆளுகைக்குள் இருக்கும் போது, பாடசாலையின் பெயரின் முன்பாக கல்வியன்காடு என எமது அயல் ஊரின் பெயர் காணப்படுவதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே எமது பாடசாலையின் பெயரை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகிறோம் என தெரிவித்தார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!