யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு (8) பொலிஸார் 500 போதை மாத்திரைகளை கைப்பற்றியதுடன், 25 வயது இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.யாழ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சுன்னாகம் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், சுன்னாகம் நகர்ப் பகுதியில் விற்பனை செய்ய எடுத்து வரப்பட்டதாகக் கூறப்படும் 500 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றினர்.கைப்பற்றலையடுத்து, சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.