Home » யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து போராட்டத்தில் குதித்த மக்கள்

by newsteam
0 comments
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லுண்டாய் பகுதி மக்களும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களும் இன்று (29) போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணம் மாநகர சபையினர் தமது எல்லைக்குள் சேகரிக்கும் மருத்துவ கழிவு, மலக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு, விலக்குக் கழிவு உட்பட பல கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் உள்ள பகுதிக்குள் கொட்டுவதால் அதை நிறுத்தும்படி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இதன்போது இன்று (29) மாநகர சபை கழிவுகளை ஏற்றி வந்த உழவியந்திரம் கள் பல வழிமறிக்கப்பட்டன.மலக் கழிவினை ஏற்றிவந்த மாநகர சபையின் வாகனம் ஒன்று உடனடியாக திரும்பிச் சென்றது. வழமையாக குறித்த பகுதிக்குள் கொட்டப்படும் கழிவுகளுக்கு தீ வைக்கப்படுகிறது.

இது குறித்து பல தடவைகள் செய்திகளும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை (28) அன்று தீ மூட்டிய நிலையில் அந்த தீ இன்று வரை எரிந்து கொண்டு இருப்பதுடன் வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கும் அண்டிய சூழலில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.குறித்த பகுதிக்கு நேற்றிரவு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வருகை தந்து பிரச்சினையை ஆராய்ந்ததாகவும், இதுவரை மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் களத்திற்கு வருகை தரவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் மயூரனுக்கு, கல்லுண்டாய் பகுதி மக்கள், மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களான உஷாந்தன், வாசன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.களத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மானிப்பாய் பொலிஸார் ஆகியோர் நிலைமைகளை சீருக்கு கொண்டு வர முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.

You may also like

Leave a Comment

error: Content is protected !!