ஜார்ஜியாவில் திங்கட்கிழமை (28) நடந்த உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கேனெரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் மோதினர்.இதில் 19 வயது நிரம்பிய திவ்யா தேஷ்முக் வென்று செஸ் உலககோப்பையை வென்றார். இந்நிலையில் தான் அவர் தனது வாழைப்பழ சென்டிமென்ட்டை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.ஜார்ஜியாவில் மகளிருக்கான உலக கோப்பை செஸ் தொடர் கடந்த 4ம் திகதி தொடங்கியது. இதில் 46 நாடுகளை சேரந்த 107 வீராங்கனைகள் பங்கேற்றனர்.இதன் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் ஆகியோர் தகுதி பெற்றனர். கிளாசிக்கல் அடிப்படையில் நடந்த முதல் ஆட்டம் டிரா ஆனது.இதனால் கிளாசிக் முறையிலான 2வது ஆட்டம் நடந்தது. இந்த போட்டியும் டிராவானது. இருவரும் சமநிலைவகித்தனர். சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.இந்த போட்டியில் கோனெரு ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார்.இந்நிலையில் தான் இந்த போட்டியில் திவ்யா தேஷ்முக் வாழைப்பழ சென்டிமென்ட்டை கடைப்பிடித்து உள்ளார். திவ்யா தேஷ்முக் செஸ் போட்டியின்போது தனது அருகே வாழைப்பழத்தை வைத்து கொள்வார்.அந்த வாழைப்பழத்தை அவர் சாப்பிடாமல் இருப்பார். இப்படி தொடப்படாத வாழைப்பழம் பலமுறை அவருக்கு அதிர்ஷ்டத்தை தந்துள்ளதாம்.அந்த வகையில் நேற்றைய டைபிரேக்கர் போட்டியிலும் அவர் கொண்டு சென்ற வாழைப்பழத்தை சாப்பிடாமல் அப்படியே வைத்திருந்த நிலையில் மகளிர் உலககோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனாகி உள்ளார்.
வாழைப்பழ சென்டிமென்ட் கொண்டு உலக செஸ் கோப்பையை வென்ற திவ்யா தேஷ்முக்
RELATED ARTICLES