ஹமாஸ் அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கை தோன்றியுள்ளதாகக் கூறி, டிரம்ப் இஸ்ரேலுக்கு காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அவர்கள் நிரந்தர அமைதிக்கு தயாராக உள்ளதாக நான் நம்புகிறேன். இஸ்ரேல் உடனடியாக காசாவைத் தாக்குவதை நிறுத்த வேண்டும். இதனால் நாம் கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும். தற்போது இது மிகவும் ஆபத்தானது. நாம் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். இது காசா மட்டுமல்ல, நீண்டகாலமாக நாடிய மத்திய கிழக்கு அமைதியைப் பற்றியது என்று டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைதி திட்டத்திற்கு ஆதரவு; இஸ்ரேலுக்கு உடனடி தாக்கு நிறுத்த அழைப்பு
5
previous post