Site icon Taminews|Lankanews|Breackingnews

அதிகமாக செல்போன் பயன்படுத்திய 11 வயது சிறுமி: தாய் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட விபரீதம்

அதிகமாக செல்போன் பயன்படுத்திய 11 வயது சிறுமி: தாய் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட விபரீதம்

செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த 11 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.
அதிகமாக செல்போன் பயன்படுத்திய 11 வயது சிறுமியை தாய் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாராவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.தீபிகா துர்வே (11 வயது) என்ற சிறுமி 8-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி அளவுக்கு அதிகமாக செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதனை அவரது தாய் கண்டித்து சிறுமியிடம் இருந்து செல்போனை வாங்கியுள்ளார்.இதனால் மனமுடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரது தாய் வீட்டுக்கு வெளியில் இருந்துள்ளார். சிறுமியின் அக்கா குளிக்கச் சென்றுள்ளார். குளித்து விட்டு வந்து பார்த்த சிறுமியின் அக்கா, தீபிகா தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக சிறுமியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version