அர்ச்சுனா இராமநாதன் ஒரு காமெடி பீஸ் பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட ஒரு காமெடியன் குறிப்பாக சொல்லப்போனால் கவுண்டமணி செந்தில் போன்ற ஒரு காமெடியன் தான் அர்ச்சுனா இராமநாதன் என பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் கத்தரித் தோட்டத்து வெருளி என விமர்சித்தது தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போதே இதனை தெரிவித்திருந்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி ஒரு பாராளுமன்ற உயரிய சபையில் எவ்வாறு பேச வேண்டும் என்ற ஒரு ஒழுக்கத்தை பின்பற்ற தெரியாத ஒரு நபராகவே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் காணப்படுகின்றார்.யாருக்கும் யாரையும் விமர்சிக்கின்ற உரிமை இருக்கின்றது ஆனால் அதனை நாகரீகமான முறையில் கையாள வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு கையாளாது தரக்குறைவாக கருத்துகளை தெரிவிப்பது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குறிய அடிப்படை தகுதி கூட இல்லாத ஒரு நபராகவே காணப்படுகின்றார் எனவே அவருடைய விமர்சனங்களை கண்டு நாங்கள் வெட்கப்படத் தேவையில்லை அவரை தெரிவு செய்த மக்களே வெட்கித் தலைகுனிய வேண்டும் ஏனெனில் எங்களையும் மக்களே தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளார்கள். எனவே எங்களுக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன, மக்களுக்கான தேவைகளை நாங்கள் நிறைவு செய்ய வேண்டிய இருக்கின்றது, மக்களுக்கு சேவை செய்ய வேண்டியே மக்கள் எம்மை அனுப்பியிருக்கின்றனர். எனவே நாங்கள் மக்களுக்கு உரிய சேவைகளை இந்த ஐந்து வருடத்திற்குள் செய்து முடிக்க வேண்டிய கடப்பாடு இருப்பதால் அர்ச்சனா போன்ற கோமாளிகளின் கருத்துகளுக்கு செவி சாய்த்து கொண்டு நேரத்தினை வீண் விரயம் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார்.அவர் கடந்த காலங்களில் மத குருமார்களை, அமைச்சர்களை, மாண்புமிகு ஜனாதிபதியினை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை கேலி செய்வது அவருடைய தொழிலாக இருந்தது வருகின்றது , மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர் மக்களுக்கு சேவை எதுவும் செய்யாது இவ்வாறான விமர்சனங்களை செய்து கொண்டு தன்னை ஒரு காமெடியனாக காட்டிக் கொண்டு திரிகின்றார் .எனவே அவரைப் பற்றி நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை என அவ் ஊடக செவ்வியில் தெரிவித்திருந்தார்.
Discover more from Taminews|Lankanews|Breackingnews
Subscribe to get the latest posts sent to your email.