Friday, August 8, 2025
Homeஜோதிடம்இன்றைய ராசி பலன் -08-08-2025

இன்றைய ராசி பலன் -08-08-2025

இன்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி, ஆயுஷ்மான் யோகம் உருவாகிறது. இன்று மகரத்தில் சந்திரன் பயணிப்பதோடு, மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்றைய யோகத்தால் கன்னி, மீனம் உட்பட 5 ராசிக்காரர்கள் நிறைய லாபம் சேரும் வரலட்சுமி தேவியின் அருளால் பணக்காரராகும் நாளாக அமையும்.

மேஷம் ராசிபலன்

மேஷ ராசிக்கு இன்று மிகவும் ஊக்கம் அளிக்கக்கூடிய நாளாக இருக்கும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உங்கள் வேலையில் எதிர்பார்த்த வெற்றியை பெறலாம். உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் நிறைந்திருக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவிட முயற்சி செய்யவும். வீட்டில் அமைதியும் செழிப்பும் நிறைந்த நாளாக இருக்கும். இன்று உங்கள் மனமகிழ்ச்சி அல்லது எண்ணங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு உண்டு. வேலை தொடர்பாக இலக்குகளை அடைவதில் நல்ல வாய்ப்புகள் இருக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது. இன்று சுறுசுறுப்பாக வேலைகளை முடிக்க உடல்நலம் உதவும்.

ரிஷபம் ராசிபலன்

ரிஷப ராசிக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் வெற்றி பெறுவார்கள். அதே சமயம் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனம் தேவை. ஏனெனில் எதிர்காலத்தில் சிக்கலாக அமைய வாய்ப்பு உண்டு. உங்கள் பண விவகாரங்களில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் பெறக்கூடிய விஷயத்தில் கவனம் தேவை. தேவையற்ற விவாதங்களால் வீட்டில் குழப்பமான சூழல் இருக்கும்.உங்கள் பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசிக்கு இன்று கடினமான நாளாக அமையும். உங்கள் பிரச்சனைகளை கவனமாக கையாளுவது நல்லது. வாழ்க்கையில் புதிய சாமான்கள் சந்திக்க வாய்ப்புகள் உண்டு. அதே சம்பவம் அதை தீர்ப்பதற்கான சிந்தனை மூழ்குவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. உறவுகளில் கவனம் செலுத்தவும். இந்த பேச்சில் நிதானமும், விட்டுக்கொடுத்துச் செல்வதும் நல்லது. அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். வேலை தொடர்பாக இலக்குகளை கடின உழைப்பு தேவை.

கடகம் ராசிபலன்

கடக ராசிக்கு இன்று அற்புதமான பலன்கள் கிடைக்கும். வெற்றியின் உச்சத்தை அடைவீர்கள். கடின உழைப்பு தேவை படலாம். ஆனால் இலக்குகளை எதிர்பார்த்த வகையில் அடைய முடியும். வேலையை மிகவும் கவனமாக செய்வதும், யாரையும் முழுமையாக நம்பாமல் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும். எதிர்கொள்ள வாய்ப்புகள் உண்டு என்பதால் செலவுகளில் கவனம் தேவை. இன்று உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உங்களுக்கான நேரத்தை சரியாக பயன்படுத்தினால் வெற்றிகள் அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு கொஞ்சம் வசதியான நாளாக இருக்கலாம்.

சிம்மம் ராசிபலன்

சிம்ம ராசிக்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். அன்றாட பணிகளை நிறைவேற்றுவதில் வெற்றி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். திருமண வாழ்க்கையில் துணையுடன் அன்பு நிறைந்திருக்கும். உங்கள் வேலைகளை முடிப்பதில் மும்முரமாகச் செயல்படுகிறது. சிலருக்கு பாராட்டு, பதவி கிடைக்கலாம். அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். முக்கியமான பணிகளை சரியான நேரத்தில் முடிக்க மும்முரமாக வேலை செய்வீர்கள். இன்று உங்கள் அதிகரிக்கும் செயல்களை கண்காணிக்க வேண்டிய நாள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசிக்கு இன்று மிகவும் நல்ல நாளாக அமையும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வாழ்க்கையில் பெரிய கனவுகளை நோக்கி பயணப்படுகிறீர்கள். முதலீடுகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை வலுவாகும். உங்கள் வேலைகளை பெரிய வெற்றி பெறலாம். சிலருக்கு பதவி அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இன்று சொத்து அல்லது பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். காதலில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.

இதையும் படியுங்கள்:  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - இறுதி தீர்மானம் வௌியானது

துலாம் ராசி பலன்

துலாம் ராசிக்கு இன்று கொஞ்சம் கடினமாக இருக்கலாம். அதனால் உங்கள் வேலைகளை சரியான திட்டம் உங்களுடன் செய்து முடிப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பு கவனம் செலுத்தவும். உறவினர்களிடமிருந்து நல்ல செய்திகளை கிடைக்கும். சிலருக்கு பரிசுகள் வழங்க திட்டமிடுவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க வாய்ப்பு உண்டு. அரசு வேலைக்கு தயாராகக்கூடிய நபர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று தவறான புரிதல்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசிக்கு இன்று மிகவும் நல்ல நாளாக அமையும். ஒவ்வொரு துறையிலும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலை தொடர்பாக சிறப்பாக செயல்படுவீர்கள். சிலர் வேலை மாற வாய்ப்பு உண்டு. உங்கள் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும் அவசியம். குடும்ப பிரச்சனைகள் குறித்து கவலை ஏற்படும். இருப்பினும் அதை குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பேசி சரி செய்ய முயலவும். நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்கு இன்று கடினமான நாளாக அமையும். உங்கள் திட்டங்களை முடிக்க சிரமப்படுகிறீர்கள். சிலருக்கு பணிகளில் தோல்வியை சந்திக்க வாய்ப்பு உண்டு. அதனால் காலையிலேயே உங்கள் வேலைக்கான திட்டமிடல் செய்வது நல்லது. உங்கள் வேலையில் பொறுமையும் உற்சாகத்துடனும் செயல்பட்டால் வெற்றி கிட்டும். தொழில் தொடர்பாக வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பற்றிய சவால் நிறைந்திருக்கும். உணவு விஷயத்தில் அக்கறை காட்டவும்.

மகரம் ராசிபலன்

மகர ராசிக்கு இன்று நல்ல நாளாக அமையும். புதிய திட்டங்களில் பொறுப்பேற்க வாய்ப்பு உண்டு. வேலைகளையும் முடிப்பதில் வெற்றி கிடைக்கும். பங்குச் சந்தையின் முதலீடுகள் மூலம் லாபம் பெறுவீர்கள். தொழிலில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். காதல் விஷயத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இன்று எதிர்காலத்தை பற்றிய சிந்தனையை அதிகரிக்கும். முதலீடுகள் மூலம் லாபத்தை பெறுவீர்கள். நிதிநிலை வலுவாக இருக்கும். வேலையில் எதிர் பார்த்த வெற்றி பெறலாம்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசிக்கு இன்று மிகவும் சவாலான நாளாக அமையும்.உங்கள் வேலைகளை நிர்வாகிகள் கடினமான சூழல் இருக்கும். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திச் செயல்படவும். எல்லா வேலைகளையும் பொறுப்புடன் செய்வது நல்லது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்யவும். இந்த அரசு தொடர்பான வேலைகள் வேகமாக முடிக்க முடியும். சில நேரங்களில் பிடிவாதமாகவும், சர்வாதிகாரத்துடனும் செயல்படுகிறது. அதனால் உங்கள் மீது பிறர் அதிருப்தி கொள்வார்கள்.

மீனம் ராசிபலன்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் கடினமான நாளாக இருக்கும். எதிலும் சவால்கள் நிறைந்திருக்கும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படவும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பாக பொறுமையுடன் செயல்படவும். தொழில் தொடர்பாக சில புதிய பிரச்சனைகளை சமாளிக்க வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். உடல் நலம் தொடர்பாக சிறப்ப கவனம் செலுத்தவும். இன்று உங்கள் உணவு மற்றும் உடல் நலனில் ஈடுபாடு அதிகரிக்கவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!