இன்றைய ராசி பலன் (ஜூலை 12, 2025 சனிக் கிழமை) இன்று சர்வார்த்த சித்தி யோகம் மற்றும் திரிபுஷ்கர யோகம் உருவாகிறது. சந்திரன் பகவான் மகர ராசியிலும் உத்திராடம், திருவோணம் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். ரிஷபம் உட்பட 5 ராசிக்காரர்களுக்கு நன்மை வாரி வழங்குவார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று மிதுன ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.
மேஷ ராசிபலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வியாபாரத்தில் கடினமாக உழைத்தால் நல்ல நிலை கிடைக்கும். எந்த ஒரு முடிவையும் யோசித்து எடுக்கவும். மற்றவர்களின் ஆலோசனையை நம்ப வேண்டாம். வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும். ஆனால், உங்கள் எண்ணங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.
ரிஷபம் ராசிபலன்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நிலை சரியில்லாமல் போகலாம். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாதவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். உங்களைப் பாராட்டுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய விஷயங்களைச் செய்தால் நல்லது.
மிதுன ராசிபலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். யாரையும் குருட்டுத்தனமாக நம்ப வேண்டாம். வருமானம் அதிகரிப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆனால், வேலையில் தடைகள் ஏற்பட்டால் மன வருத்தம் ஏற்படும். உங்களை நிரூபிக்க முயற்சி செய்வீர்கள். ஆனால், நண்பர் ஒருவரால் பிரச்சனை வரலாம். சமூக நிகழ்ச்சிகளில் ஆர்வமாகப் பங்கேற்பீர்கள்.
கடக ராசிபலன்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடலாம். வேலை விஷயமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். சகோதரரிடம் உதவி கேட்டால் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம் ராசிபலன்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். எதிரிகளால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேராது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும், பயணம் செய்ய திட்டமிட்டால் பெற்றோரிடம் ஆலோசனை கேட்கவும். பணம் கிடைப்பதால் உங்கள் நிதி நிலைமை உயரும். உங்கள் திறமையைப் பார்த்து அவர்களே சண்டையிட்டுக்கொள்வார்கள். இதயத்தையும், மனதையும் ஒருசேர யோசித்து திட்டமிடவும்.
கன்னி ராசிபலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வேலையைத் திட்டமிடலாம். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால். நிபுணர்களின் ஆலோசனை தேவைப்படும். கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். நண்பர்களுடன் பேசுவதால் பழைய நினைவுகள் வரும்.
துலாம் ராசிபலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பரஸ்பர ஒத்துழைப்பு இருக்கும். நண்பரிடமிருந்து முதலீட்டு வாய்ப்பு வரலாம். வீட்டைப் புதுப்பிக்கவும் திட்டமிடலாம். நினைத்ததைவிட செலவுகள் அதிகரிக்கும் என்பதால் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். இல்லையெனில், பின்னாளில் கஷ்டப்பட வேண்டியிருக்கும். காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் தங்கள் துணையுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வேலையில் உங்களை நிரூபிக்க முயற்சிப்பதால் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியாது.
விருச்சிக ராசிபலன்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். பழைய பரிவர்த்தனைகள் பெரிய பிரச்சனையாக மாறலாம். எனவே, கவனமாக இருங்கள். புதிய சொத்து வாங்க வாய்ப்புள்ளது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வேலையை மற்றவர்களிடம் விட்டுவிடாதீர்கள். அவர்கள் தவறு செய்ய வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினருக்கு வேலை மாறினால் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கும்.
தனுசு ராசிபலன்
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் அன்றாட தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய முடியும். வேலை சம்பந்தமாக குறுகிய தூர பயணம் செல்லலாம். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலையில் பிரச்சனைகள் இருந்தாலும், உங்கள் கடின உழைப்பால் அதிகாரிகளிடம் உங்கள் கருத்தை எடுத்துச் சொல்வீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக வருமானம் இருக்காது.
மகர ராசிபலன்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். உங்கள் திறமை வேலையில் பிரகாசிக்கும். அது மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும். குடும்பத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் யாருக்காவது ஆலோசனை கொடுத்தால், அவர்கள் அதை பின்பற்றுவார்கள். யாருக்காவது வாக்கு கொடுத்திருந்தால் அதை நிறைவேற்றுங்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். இல்லையெனில் பிரச்சனை வரலாம். உங்கள் பிள்ளைகளின் பொறுப்பை நிறைவேற்றுவீர்கள்.
கும்ப ராசிபலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஆர்வமாக பங்கேற்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் பூஜை இருப்பதால் உறவினர்கள் வருவார்கள். பெற்றோருடன் கோவில், பூஜை என ஆன்மிக ஸ்தலத்திற்கு பயணம் செல்லலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மன அழுத்தம் இருந்தால். உங்கள் மகிழ்ச்சியும், வளமும் அதிகரிக்கும். சில செலவுகள் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கலாம். அதை கட்டுப்படுத்த வேண்டும்.
மீன ராசிபலன்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கவலை நிறைந்த நாளாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனை இருந்தால் அலட்சியம் செய்ய வேண்டாம். பழைய முதலீட்டில் இருந்து நல்ல லாபம் கிடைக்காததால் கவலைப்படுவீர்கள். அதிக வேலை காரணமாக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வெளியில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் செய்ய நேரிடலாம். அதில் இனிமையாக பேச வேண்டும். உங்கள் வங்கி இருப்பை அதிகரிக்க முயற்சிப்பீர்கள்.