இன்று செப்டம்பர் 23, செவ்வாய் கிழமை சந்திர தரிசனம் செய்ய வேண்டிய நாள். இன்று சந்திர பகவான் கன்னி ராசியான அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய நாளில், கிரக சேர்க்கைகளால் துவிபுஸ்கர் யோகம் உருவாகிறது. இன்று கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் ஏற்படுகிறது.
மேஷம் ராசிபலன்
மேஷ ராசிக்கு இன்று அந்தஸ்து பதவி மற்றும் நற்பெயர் அதிகரிக்கும். உங்களுக்கு மகிழ்ச்சியான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். திடீர் நிதி ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பண வரவு பல விதத்தில் சாத்தியமாகும். இது உங்களுடைய நிதி நிலையை வலுப்படுத்தும். மாலை நேரத்தில் ஆன்மீக நடவடிக்கைகளை நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து முழு ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். இன்று உங்கள் பெற்றோரை புனித ஸ்தலத்திற்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு உண்டு.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு சமூக பணிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய மரியாதை அதிகரிக்க கூடிய நாள். உங்களுடைய செயல்கள் பெருமையை பெற்று தரும். மக்களிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். இன்று சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வணிகம் தொடர்பான புதிய யோசனைகள் முயற்சிகள் நல்ல பலனை தரும். இன்று உங்களுடைய நிதி நிலையை வளப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாணவர்கள் உயர் கல்வி தொடர்பான முயற்சி நல்ல பலனை தரும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்கு சர்ச்சைகள் நிறைந்ததாக இருக்கும். இன்று உங்கள் சகோதரர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். உங்களுடைய பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கடுமையான வார்த்தைகள் வேண்டாம். இன்று பணியிடத்தில் எதிரிகள் சதி திட்டங்களால் உங்கள் வேலையை முடிப்பதில் சில தொந்தரவுகள் சந்திக்க நேரிடும். உங்கள் திறமைகள் எதிர்பார்த்த வெற்றியை பெறலாம். உங்கள் வாழ்க்கை துணையிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். சொத்து தொடர்பான எந்த ஒரு தகராறும் இன்று முடிவுக்கு வரும்.
கடக ராசி பலன்
இன்று உங்களுக்கு பெரிய வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டமும் உங்களுக்கு துணையாக இருக்கும். முக்கிய நண்பர்களின் உதவி, உங்களுடைய மதிப்பை அதிகரிக்க கூடியதாக இருக்கும். தொழில் தொடர்பாக புதிய திட்டங்களை செயல்படுத்த இன்று சாதகமான நாளாக இருக்கும். எந்த ஒரு செயலிலும் புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் குழந்தைகளின் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் பெறுவார்கள். இது அவர்களின் உத்வேகம் அதிகரிக்கும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசி சேர்ந்தவர்களுக்கு எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்கவும். உங்களுடைய ரகசியங்களை யாரிடம் நம்ப தெரிந்து கொள்ள வேண்டாம். இதனால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்களுடைய பதவியை வைத்து சில நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் வணிகம் தொடர்பாக லாபம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் சுய முன்னேற்றத்திற்காக நேரம் ஒதுக்க முயலவும். உங்கள் திருமண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையில் துணையுடன் இணக்கமான சூழல் இருக்கும்.
கன்னி ராசி பலன்
இன்று மாணவர்கள் தங்கள் படிப்பு, கலை மற்றும் எழுத்துத் திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இது அவர்களின் கல்வி சூழலில் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் சில மனகுழப்பத்தால் நிறைந்திருப்பீர்கள், மேலும் இன்று சுய முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய எந்த விரக்தியும், சோம்பேறித்தனமும் இன்று முடிவுக்கு வரும். தடைகள் நீங்கும். குடும்பத் தொழிலில் உங்கள் தந்தையின் ஆலோசனை நன்மை பயக்கும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சில நல்ல வரன் அமையும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கொஞ்சம் கவலைப்படுவீர்கள்.
துலாம் ராசி பலன்
இன்று உங்கள் ராசிக்கு எதிர்பார்த்த உங்களின் ஒரு முக்கியமான பணியை மேற்கொண்டு முடிப்பீர்கள். இந்தப் பணிகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், உங்கள் கடின உழைப்பின் பலனை அறுவடை செய்வீர்கள், இது உங்களுக்கு வெற்றியைத் தரும். உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்த முடியும், எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் நீங்கும். இன்று உங்கள் வீட்டுக்கு தேவையான சில முக்கிய பொருட்களை வாங்கலாம். முதலீடு செய்ய விரும்பினால், இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
உங்கள் செயல்பாடுகள், வேலை, ஆரோக்கியம் தொடர்பாக மிகவும் கவலைப்படுவீர்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய சூழல் இருக்கும். மாலை நேரத்திற்க்குள், சில வேலைகளில் உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி உங்கள் பிரச்சனைகளைக் குறைக்க முடியும். மாலையில் ஆன்மிகம் மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள், இது நன்மை பயக்கும். சேர்க்கையைக் கருத்தில் கொண்ட மாணவர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்கு இன்று பெற்றோரின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும். இன்று இரவு நேரத்தில் உங்கள் உடல் நலம் தொடர்பாக சில சிரமங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. மாலைப் பொழுது சற்று இனிமையான சூழ்நிலையை அனுபவிப்பீர்கள். உங்கள் மனதில் நிம்மதியாக உணர்வீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. நிதி நிலை படிப்படியாக முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் குழந்தைகள் தொடர்பான ஒரு முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உண்டு. அவர்களின் எதிர்காலம் தொடர்பாக இன்று உங்களுக்கு சில பதட்டங்களை ஏற்படுத்தக்கூடும்.
மகரம் ராசி பலன்
மகர ராசிக்கு இன்று மகிழ்ச்சியாக உணர்வீர்கள். இன்று பல இடத்திலிருந்து நல்ல செய்திகளும், பண ஆதாயம் தரக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று உங்கள் செயல்பாடுகளில் வெற்றி பெறுவார்கள். அனைத்து பணிகளையும் ஒவ்வொன்றாக முடிக்க முடியும். இது உங்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் மகிழ்விக்கும். உங்கள் வாழ்க்கை துணை உடன் இணக்கமான சூழலை கடைபிடிப்பீர்கள். காதல் வாழ்க்கையில் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் முழு ஆதரவை பெறுவீர்கள். இன்று லாபத்திற்கான பல வழிகள் திறக்கும். உங்கள் பணத்தை சரியான விதத்தில் செலவிடவும். உங்களின் திட்டமிட்ட வேலைகள் சரியாக முடிக்க முடியும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. முக்கிய வேலைகளை முடிப்பதிலும், முடிவுகளை எடுப்பதிலும் கவனம் தேவை. சாதுரியமாக உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை பயன்படுத்தவும். இன்று பணியிடத்தில் உங்களுடைய இலக்குகளையும் அடைய முடியும்.
மீன ராசி பலன்
இன்று உங்களுடைய குழந்தைகளுக்கு திருமணம் தொடர்பான முயற்சிகளில் நல்ல தகவல் கிடைக்கும். உங்கள் வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். வணிகம் மற்றும் தொழில் தொடர்பாக குறிப்பிட்ட லாபத்தை பெறலாம்.இன்று நீங்கள் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விட வேண்டாம். நிதிநிலை தொடர்பான விஷயங்களில் வலுவாக இருப்பீர்கள். உங்கள் துணைக்கு பரிசு வழங்க திட்டமிடுவீர்கள். உங்கள் வீட்டில் ஆன்மீகம், சுப காரியங்கள் தொடர்பான விஷயங்கள் நடக்கும். இதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய புகழ் அதிகரிக்க கூடிய நாள்.