தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக சுண்ணக்கல் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் வர்த்தக நிலையமொன்றின் வாகனமொன்று, நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் இடைமறிக்கப்பட்டு சாவகச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.இந்தநிலையில், தமது வர்த்தக நிறுவனம் சட்டரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தமக்கும், தமது நிறுவனத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தாம் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.இந்தநிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு
RELATED ARTICLES