எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்காக 72 ரூபாயும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றுக்காக 50 ரூபாயும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றுக்காக 57 ரூபாயும் வரியாக விதிக்கப்படுகிறது.இந்தநிலையில், குறித்த வரியை கடந்த 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தொடர்ச்சியாக மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியில் மாற்றமில்லை – வெளியாகியது வர்த்தமானி
By newsteam
0
179
Previous article
Next article
RELATED ARTICLES