போசாக்கு மட்டம் குறைவாகவுள்ள 160,200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்தார்.பெண் தலைமைத்துவ குடும்பங்களில் நிலவும் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம், கொவிட் காலம் ஆகியவற்றின் பின்னர் போசாக்கு குறைபாடு மோசமடைந்துள்ளதாகவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.