கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.இன்று (14) முதல் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார்.கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை பிணையில் விடுவிக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் நேற்று (13) உத்தரவிட்டது.கடந்த வெள்ளிக்கிழமை (10) கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவருக்கும் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பொலிஸ் கான்ஸ்டபிள் சட்டத்தரணியை தாக்கியதாகக் கூறப்பட்டது.
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி தாக்குதல் – பொலிஸ் கான்ஸ்டபிள் இடமாற்றம்
67
previous post