Site icon Taminews|Lankanews|Breackingnews

கிணற்றுக்குள் தவறி விழுந்த கரடிகளை ஏணியை வைத்து மீட்ட வனத்துறையினர் (Video)

கிணற்றுக்குள் தவறி விழுந்த கரடிகளை ஏணியை வைத்து மீட்ட வனத்துறையினர்

ஊட்டியில் கடந்த சில நாட்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.ஊட்டி மட்டுமில்லாமல் குன்னூர் கோத்தகிரியில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கோத்தகிரியில் உள்ள ஜக்கனாரை அடுத்த தும்பூர் குக்கிராமத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் கரடிகள் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளன.இது தொடர்பாக தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கிணற்றுக்குள் ஒரு ஏணி வைத்தனர். பின்னர் அந்த ஏணியை பிடித்து மேலே ஏறி வந்த கரடிகள் வனப்பகுதிக்குள் ஓடின.கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் ஏணியை பிடித்து மேலே ஏறி வரும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Exit mobile version