கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.கடந்த 27 ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பாதாள உலகக் குழு தலைவர்கள் ஐவரும் நேற்று இரவு 30 நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களைக் கைது செய்து நாட்டுக்கு கொண்டு வருவதில் முன்னிலை வகித்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளையும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பொலிஸ் அதிகாரிகளையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் வரவேற்றிருந்தனர்.
கெஹெல்பத்தர பத்மே குழுவை கைது செய்த இந்தோனேசிய பொலிஸாருக்கு விருது
By newsteam
0
63
Previous article
RELATED ARTICLES