கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.கிரிபத்கொடை பொலிஸாரல் நடத்தப்பட்ட சோதனையில், T-56 துப்பாக்கியுடன் முச்சக்கர வண்டியில் சென்றபோது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியா பிரிவு குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி கைக்குண்டுகளுடன் மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்தனர்.குறித்த சந்தேக நபர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் கைக்குண்டுகளை வைத்திருந்த மற்றொரு சந்தேக நபரும் அதே நடவடிக்கைகளில் ஈடுபட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களும் இருப்பதும் தெரியவந்தது.அதன்படி, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய வவுனியா பகுதிக்குச் சென்றிருந்த போது, அதற்குள் சந்தேக நபர்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களைப் பற்றி ஏதேனும் தகவல் அறிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர்.
சந்தேக நபர்களின் விபரங்கள் பின்வருமாறு,
ஜீவராசா சுஜீபன் (30 வயது)
முகவரி – காந்தி நகர், நேரியகுளம், வவுனியா தே.அ. இலக்கம் – 950554215V
இளங்கோ இசைவிதன் (வயது – 27)
முகவரி – எண். 379, 03வது பகுதி, மெனிக்பாம், செட்டிகுளம் தே.அ. இலக்கம் – 199836210402
மகேந்திரன் யோகராசா (வயது – 27)
முகவரி – அராலி மேற்கு, வட்டுக்கோட்டை தே.அ. இலக்கம் – 981633881V
தகவல் அறிவிக்க வேண்டி தொலைபேசி இலக்கங்கள்
பொறுப்பதிகாரி – பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு – 071-8591966
பொறுப்பதிகாரி விசாரணை பிரிவு – 071-8596150