தங்காலையில் நேற்று (22) 3 பாரவூர்திகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மொத்த போதைப்பொருள் தொகை 705.174 கிலோ என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.3 பாரவூர்திகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் கல்கிஸ்ஸை, எல்பிட்டிய மற்றும் மிட்டியாகொட பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்காலையில் உள்ள சீனிமோதர பகுதியில் நேற்று நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனை, இதுவரை, இலங்கையின் நிலப்பகுதியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் சோதனை என்று காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.