Site icon Taminews|Lankanews|Breackingnews

நண்பனின் காதலியை மிரட்டிய நபருக்கு நேர்ந்த கொடூரம்! 17 வயது சிறுவன் செய்தசெயல்

நண்பனின் காதலியை மிரட்டிய நபருக்கு நேர்ந்த கொடூரம்! 17 வயது சிறுவன் செய்தசெயல்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் அபினவ். இவரும், இவருடைய நண்பர் ஒருவரும் அங்குள்ள பள்ளி ஒன்றில் முறையே 11 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து வந்தனர். தவிர, பொறியியல் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில் அருகே இருந்த பயிற்சி மையத்துக்கு இருவரும் ஒன்றாகவே சென்று வந்துள்ளனர்.இந்த நிலையில், அபினவின் நண்பருக்கு பெண் தோழி ஒருவர் இருந்துள்ளார். இதற்கிடையே, அந்த நண்பரும் அவருடைய பெண் தோழியும் ஒன்றாக இருந்ததை வீடியோவை எடுத்து வைத்துள்ளார். அதை, அபினவிடமும் காட்டியிருக்கிறார். இந்தச் சூழலில் அந்த வீடியோவை தனது செல்போனுக்கு அபினவ் அனுப்பியுள்ளார். தவிர, அதைவைத்து அந்த மாணவியை அபினவ் மிரட்டியுள்ளார்.

நான் சொல்வதுபோல நீ நடந்துகொள்ள வேண்டும்; இல்லையென்றால் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்’ என அபினவ் மிரட்டியுள்ளார். இதனால் பதற்றமடைந்த அந்த மாணவி, இதுகுறித்து தனது காதலரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அபினவை கொலைசெய்ய அந்த நண்பர் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக, அந்த நண்பர் சம்பவத்தன்று, ’எனது செல்போனை விற்கச் செல்கிறேன்; நீயும் கடைக்கு வா’ என அழைத்துள்ளார். அபினவும் சென்றுள்ளார்.இருவரும் போனை ரூ.8 ஆயிரத்திற்கு விற்றுள்ளனர். பின்னர், அந்தப் பணத்தில் ஹோட்டல் ஒன்றில் இருவரும் சாப்பிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் வழியில் கிணறு ஒன்றின் அருகே அபினவின் தலையில் சுத்தியால் அடித்து அவரைக் கொலை செய்துள்ளார். அத்துடன் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.

இதற்கிடையே அபினவைக் காணாமல் அவரது பெற்றோர் தேடியுள்ளனர். அப்போதும்கூட அபினவின் நண்பர் எதுவும் தெரியாமல் இருந்துள்ளார். ஆனால், போலீசார் சிசிடிவி மூலம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் ஒன்றாகச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நண்பரைப் பிடித்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார். போலீசார் மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version