அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா பல்வேறு விண்வெளியை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.விண்வெளித் துறையில் அமெரிக்கா – சீனா இடையே போட்டி அதிகரித்து வருகிறது. நிலா மற்றும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. நிலா மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக வேலை செய்து வருகின்றன.இந்நிலையில், நிலா மற்றும் சீனாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த விவரங்கள் சீனாவுக்கு தெரிந்துகூட கூடாது என்பதற்காக நாசாவில் வேலை செய்ய சீனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நாசா மையத்திற்கு சீனர்கள் வரவும், விண்வெளித் திட்டங்கள் தொடர்பான தரவுகளை அணுகவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.