மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்திலுள்ள பாடசாலையில் சிற்றுண்டிச் சாலையில் செவ்வாய்க்கிழமை (11) விற்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 52 மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்மாணவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.குறித்த மாணவர்கள் பாடசாலை இடைவேளை நேரத்தில் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச் சாலையில் நூடுல்ஸ் வாங்கி உண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கரடியனாறு மகா வித்தியாலயத்தில் தரம் ஆறு முதல் உயர்தரம் வரையிலான 21 ஆண்களும் 31 பெண்களுமாக 52 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த மாணவர்களில் மூவர் மயக்கமுற்ற நிலையிலும் ஏனையவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டதன் காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று உணவு மாதிரிகளை பரிசோதித்து வருகின்றனர்.கரடியனாறு பொலிஸார் பாடசாலைக்குச் சென்று சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் கரடியனாறு பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் பெற்றோர் மற்றும் பிரதேசவாசிகள் பிரவேசத்தினால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
Discover more from Taminews|Lankanews|Breackingnews
Subscribe to get the latest posts sent to your email.