Home » மருமகனை காதலித்து தாலி கட்ட முயன்ற மாமியார் – தடுத்த மகளை கொலை செய்ய முயற்சி

மருமகனை காதலித்து தாலி கட்ட முயன்ற மாமியார் – தடுத்த மகளை கொலை செய்ய முயற்சி

by newsteam
0 comments
மருமகனை காதலித்து தாலி கட்ட முயன்ற மாமியார் – தடுத்த மகளை கொலை செய்ய முயற்சி

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர்.
இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அதே பகுதியில் வசித்து வந்தனர் இவர்களுடன் கணவனை இழந்த சிறுமியின் 40 வயது தாயாரும் வசித்து வந்தார்.இந்த நிலையில் மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது சிறுமி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்தனர்.இதனை அறிந்த சிறுமி தனது கணவர் மற்றும் தாயாரை கண்டித்தார் ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை. மேலும் மாமியார் தனது மருமகனை திருமணம் செய்ய முடிவு செய்தார்.நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே வாலிபர் தனது மாமியாருக்கு தாலி கட்ட முயன்றார். இதனை கண்ட அவருடைய மனைவி தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தார்.ஆத்திரமடைந்த அவரது தாயும் கணவரும் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர்.அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டனர் . மேலும் மாமியார் மற்றும் மருமகனை சரமாரியாக தாக்கினார் அவர்கள் இருவரையும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!