முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த அவர், கண்டி மற்றும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைகளை தவிர ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும் நாட்டு மக்களின் நலன்களுக்காக சிறந்த முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களால் தப்பிக்க முடியாது.அதற்கமைய, ஊழல்களில் ஈடுபட்ட மோசடியாளர்கள் தற்போது சட்டத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.அரசாங்கம் சட்ட விவகாரத்தில் தலையிடுவதில்லை.சட்டம் தனக்குரிய வகையில் தமது கடமையை நிறைவேற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.