Site icon Taminews|Lankanews|Breackingnews

மூத்த சகோதரி மீது அதிக பாசம் – வயதான தாயை கொன்ற இளைய மகள்

மூத்த சகோதரி மீது அதிக பாசம் - வயதான தாயை கொன்ற இளைய மகள்

தன்னை விட சகோதரி மீது அதிகம் அன்பு செலுத்திய வயதான தாயை மகள் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 71 வயதான பெண் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண்ணுக்கும் 41 வயதான அவரது இளைய மகளுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே இறுதியில் கொலையில் முடிந்துள்ளது வயிறு, மார்பு, கழுத்து மற்றும் பிற உடல் பாகங்களில் பலமுறை குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலையை மேற்கொண்ட பெண்ணை மகாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Exit mobile version