யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த பிரவுண்ராசா நாகேஸ்வரி (வயது 78) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண்ணின் கணவர் உயிரிழந்த நிலையில் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்றையதினம் உருக்குலைந்த நிலையில் அவரது வீட்டு கிணற்றடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழில் உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது
By newsteam
0
193
Previous article
Next article
RELATED ARTICLES