யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது எழுவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் மூவர் போதை மாத்திரைகளுடனும், இருவர் ஐஸ் போதைப்பொருளுடனும் மேலும் இருவர் ஹெரோயின் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேவேளை கைதானவர்களில் ஒருவர், 3.2 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு எதிராக ஏற்கனவே 8 கிராம் ஹெரோயினுடன் தொடர்புடைய வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் சுன்னாகம் பகுதியில் எழுவர் போதைப்பொருட்களுடன் கைது
By newsteam
0
138
Previous article
RELATED ARTICLES