இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான யாழ்ப்பாணம் நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.எனவே , இதனை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி, பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக நல்லூர் இராசதானி காலத்து மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.இந்நிலையில் , மந்திரிமனையினை நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டோர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.அதன் போது, தொல்லியல் திணைக்களத்தின் யாழ். பிராந்திய உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துலஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோருடன் அமைச்சர்கள் கலந்துரையாடி , மந்திரிமனையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தனர்