Friday, July 4, 2025
HomeUncategorizedயாழ் ரயிலில் மோதிய மோட்டார் சைக்கிள்; தாய், மகளுக்கு வைத்தியசாலையில் அனுமதி

யாழ் ரயிலில் மோதிய மோட்டார் சைக்கிள்; தாய், மகளுக்கு வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகள் என இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்றைய தினம் (2) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் பறண்நட்டகல் வீதியில் பிரவேசிக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய், மகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.விபத்து இடம்பெற்ற காரணத்தினால் ரயில் அங்கிருந்து அரை மணிநேரம் தாமதமாகவே கொழும்பு நோக்கிப் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த ரயில் கடவை ஓர் பாதுகாப்பற்ற ரயில் கடவையாகும் என்பதுடன் அது குறித்த எச்சரிக்கை பதாதைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  ரஷிய வீரர்களை வடகொரிய வீரர்கள் சுட்டு தள்ளிய அவலம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!