Sunday, May 11, 2025
Homeஇலங்கைவடமராட்சி கிழக்கு வத்திராயனில் தேடுதலில் மேலும் 24 கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

வடமராட்சி கிழக்கு வத்திராயனில் தேடுதலில் மேலும் 24 கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123Kg கேரள கஞ்சா நேற்று (4) அதிகாலை மீட்கப்பட்டதை தொடர்ந்து மேலும் நடத்திய தேடுதல் வேட்டையில் 24 கஞ்சா பொதிகள் மேலதிகமாக மீட்கப்பட்டுள்ளது
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்புக்குள்ளாகியது
இந்த தேடுதலின் போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 123Kg கேரள கஞ்சா முதல் கட்டமாக பொலிஸ் STF மற்றும் கடற்படையால் மீட்கப்பட்டது.சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாததால் சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் வத்திராயன் பகுதியை சுற்றிவளைத்து மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் நடத்தினர்.இந்த தேடுதல் நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.நேற்றைய தினம் வத்திராயனில் மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த நிறை 174Kg 126g எனவும் இதன் மொத்த பெறுமதி 69மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  சாவகச்சேரி நகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் திறந்து வைப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!