வவுனியா- குருமன்காடு பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பெண்ணொருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இன்று (22) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, மன்னார் வீதி, குருமன்காடு சந்திப் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் முன்னால் முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன், அதில் வயோதிப பெண்மணி ஒருவரும் இருந்துள்ளார். இதன்போது தனியார் வைத்தியசாலை முன்பாக வீதியில் இருந்த மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்துள்ளது. மரம் முறிந்து விழுவதை அவதானித்த வயோதிப பெண்மணி, முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி ஓடியதால் பாதிப்புக்கள் இன்றி தப்பியுள்ளார்.எனினும் முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததால் முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது.
Discover more from Taminews|Lankanews|Breackingnews
Subscribe to get the latest posts sent to your email.