அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர்.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 13 பேர் வரை பலியானார்கள். இந்நிலையில், 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கோடை கால முகாமுக்கு சென்றுள்ளனர். அவர்களில், 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.கவர்னர் டேன் பேட்ரிக் கூறும்போது, 10 உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். தொடர்ந்து அவர், கோடை கால முகாமுக்கு வந்த மாணவிகளில் 23 பேர் காணவில்லை என தெரிய வந்துள்ளது.எனினும், அவர்கள் தொலைந்து போய் விட்டார்கள் என அர்த்தமில்லை. அவர்கள் மரங்களில் பாதுகாப்பாக இருக்கலாம். அல்லது தொடர்பு கொள்ள முடியாத இடங்களில் இருக்க கூடும் என கூறியுள்ளார்.20-க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மற்றும் அவசரகால பொறுப்பு படையினர், காணாமல் போனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.