சீன அரசு, அமெரிக்கத் திரைப்படங்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு முழுமையான தடையை விதித்துள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. இந்த அதிரடி முடிவு, உலகின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சந்தைகளில் ஒன்றாக விளங்கும் சீனாவில் அமெரிக்க சினிமாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இது அமெரிக்க-சீன உறவில் ஏற்கனவே நிலவும் பதற்றங்களை மேலும் மோசமாக்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.சீனாவின் இந்த முடிவு, அமெரிக்க-சீன வர்த்தகப் போரின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரிகள், சீனப் பொருட்களுக்கு 54% வரை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனா பதிலடியாக இந்தத் தடையை அறிவித்துள்ளது.இதற்கு முன்னதாக, அரிய புவி உலோகங்களின் ஏற்றுமதியை சீனா கட்டுப்படுத்தியிருந்தது, இது அமெரிக்காவின் மின்னணு மற்றும் பாதுகாப்புத் துறைகளை பாதித்தது. இப்போது, அமெரிக்கத் திரைப்படங்களுக்கான தடை மற்றொரு முக்கிய அடியாக உள்ளது.
அமெரிக்க திரைப்படங்களுக்கு தடை விதித்த சீனா
By newsteam
0
48
Previous article
Next article
RELATED ARTICLES