Home » அஸ்கிரி பீடத்தின் புதிய அனுநாயக்கராக நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவு

அஸ்கிரி பீடத்தின் புதிய அனுநாயக்கராக நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவு

by newsteam
0 comments
அஸ்கிரி பீடத்தின் புதிய அனுநாயக்கராக நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவு

வெற்றிடமாகவிருந்த அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க பதவிக்கு அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இந்தப் பதவிக்கான தேர்தல் அஸ்கிரி மகா மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய வரகாகொட ஞானரதன தேரரின் தலைமையில் இன்று (28) பிற்பகல் 2.00 மணிளவில் கண்டி, அஸ்கிரி மகா விகாரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க உபோசிதகராயத்தில் இடம்பெற்றது.அஸ்கிரிய மகா சங்க சபையின் 19 தேரர்கள் இதற்கு வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.அஸ்கிரி பீடத்தின் சிரேஷ்ட குழு உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய உருளேவத்த தம்மரக்கித தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் சிரேஷ்ட பதிவாளர் வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் ஆகியோர் இந்தப் பதவிக்காக போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தனர்.அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கராக கடமையாற்றிய வணக்கத்திற்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரர் காலமானதையடுத்து அப்பதவி வெற்றிடமாகியிருந்தது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!