Tuesday, August 26, 2025
Homeஇந்தியாஆந்திராவில் கூடுதல் வரதட்சணைக்காக 2 ஆண்டுகள் மனைவியை பட்டினி வைத்துக் கொன்ற கணவர்

ஆந்திராவில் கூடுதல் வரதட்சணைக்காக 2 ஆண்டுகள் மனைவியை பட்டினி வைத்துக் கொன்ற கணவர்

ஆந்திரா மாநிலம் கம்பம் மாவட்டம் கல்லூர், முடிச்சாவரத்தை சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா (வயது33). இவரது கணவர் நரேஷ் பாபு.இத்தம்பதிக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 2 ஏக்கர் மாந்தோப்பு, ஒரு ஏக்கர் விவசாய நிலம், ரூ.10 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்தனர்.தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது .அப்போது நரேஷ் பாபு மனைவி மற்றும் குழந்தையுடன் 6 ஆண்டுகள் மாமியார் வீட்டில் வசித்தார்.பின்னர் அஸ்வராபேட்டையில் உள்ள சகோதரி பூ லட்சுமி வீட்டிற்கு குடி பெயர்ந்தார். கடந்த 2 ஆண்டுகளாக லட்சுமி பிரசன்னாவிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு உணவு அளிக்காமல் வீட்டில் சிறை வைத்து உடல் முழுவதும் சூடு வைத்து சித்ரவதை செய்தனர்.இதனால் லட்சுமி பிரசன்னாவின் உடல் எலும்பு கூடாக மாறியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமனாருக்கு போன் செய்த நரேஷ் பாபு உங்களது மகள் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து காயமடைந்ததால் ராஜ மகேந்திரவரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.இதனைக் கேட்டு பதறிப்போன லட்சுமி பிரசன்னாவின் பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள் லட்சுமி பிரசன்னா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அடையாளம் காண முடியாத அளவு லட்சுமி பிரசன்னாவின் உடல் மெலிந்து எலும்பு கூடாக இருந்ததை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். அவரது உடல் முழுவதும் புதியதாக சூடு வைத்ததற்கான அடையாளங்களும் ஏற்கனவே சூடு வைத்து ஆறிப்போன அடையாளங்களும் இருந்தது.இதுகுறித்து வெங்கடேஸ்வர ராவ் போலீசில் புகார் செய்தார். போலீசார் மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள நரேஷ் பாபு, அவரது சகோதரி பூ லட்சுமி, தாய் விஜயலட்சுமி, மைத்துனர் சீனிவாச ராவ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  பள்ளி மாணவிக்கு மாரடைப்பு – 9 வயதில் உயிரிழந்த ராஜஸ்தான் சிறுமி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!