Site icon Taminews|Lankanews|Breackingnews

இந்தியாவில் 5 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை

இந்தியாவில் 5 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும் ஓட முயற்சித்த அந்நபரை அருகே இருந்த மக்கள் மடக்கிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் கடந்த 18ம் தேதி நடந்த நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.பொருளாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மை அதிகரித்திருக்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நாடகமாடி ஏமாற்ற முயற்சிக்க, பரிசோதனையில் அவருக்கு மனநில குறைபாடு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை செய்த பவித்ரா என்ற அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இவர் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக ஆக்ரா காவல் ஆணையரகம், தனது எக்ஸ் வலைதளத்தில், இந்த சம்பவம் ஜெகதீஷ்புரா பகுதியில் நடந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் “பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது” என்று பதிவிட்டுள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும்நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version