Friday, May 9, 2025
Homeஜோதிடம்இன்றைய ராசி பலன் - 08-05-2025

இன்றைய ராசி பலன் – 08-05-2025

இன்றைய ராசிபலன் 8.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 25, வியாழக் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம்,கும்பம் ராசியில் அவிட்டம், சதயம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நேர்மறையான எண்ணங்களால் மனம் நிறையும். உங்கள் செயல்களிலும், திட்டங்களிலும் வெற்றி பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களின் யோசனைகளால் பாராட்டு கிடைக்கும். குடும்ப உறவுகள் மேம்படும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்தவும். எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களின் நேரத்திற்காகவும், வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருக்கவும். இன்று உங்களின் ஆற்றலை சரியான விதத்தில் செலவிடுவீர்கள். பிள்ளைகள் மற்றும் துணைக்காக நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று புத்திசாலித்தனமாக எதிலும் செயல்படும். வேலை, தொழில் மற்றும் குடும்ப பொறுப்புகளை சமாளிக்க சரியான திட்டமிடல் அவசியம். அதனால் உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் சரியாக திட்டமிட்டு செயல்படவும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். குடும்ப உறவுகளின் உணர்வுகளை புரிந்து செயல்படவும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று உங்கள் அணுகுமுறைகள் சரியான கணக்கீடு இல்லாவிட்டால் சிக்கலில் ஏற்படும். உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்கவும். குடும்ப உறுப்பினர்களால் சில பிரச்சனைகள் ஏற்படும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் விரும்பிய நற்பலனை பெற கடின முயற்சி தேவைப்படும். வணிகம் தொடர்பான முயற்சிகளில் லாபத்தை பெறுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்களின் முயற்சிக்கான பாராட்டை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். இன்று உங்கள் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று தனிப்பட்ட மற்றும் திருமண உறவுகளில் இனிமையான சூழல் உருவாகும். வேலை, தொழில் தொடர்பாக இன்று திடீர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. இன்று எதிர்பாராத வகையில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையிடம் அல்லது பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

இதையும் படியுங்கள்:  யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வரவில் சிறந்த உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சில விஷயங்களால் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று பரஸ்பர புரிதலை பராமரிக்கவும். வணிகம் தொடர்பான அதிக லாபத்திற்காக கவனம் செலுத்துவதால், தனிப்பட்ட உறவுகளை கவனிக்க இயலாத சூழல் இருக்கும். உங்கள் துணையுடன் காதலை பராமரிப்பது அவசியம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் முனைவோர் செயல்படுத்த நினைக்கக்கூடிய பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். இன்று பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காது. உங்களின் கோபத்தையும், எரிச்சல் குணத்தையும் கட்டுப்படுத்தவும். குடும்ப வாழ்க்கையில் சாதகமான நாள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்தி எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த விடுமுறை கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் தொடர்பாக எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியடையும். வாழ்வதாரம் முன்னேற்றம் உண்டாகும். சூழலை கருத்தில் கொண்டு செயல்பட்டால் வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் இலக்கை அடைய கடின உழைப்பு தேவைப்படும். தனிப்பட்ட உறவுகளில் கருத்து வேறுபாடுகள், கோபத்தை விடுத்து அனுசரித்து செல்லவும். உங்கள் தொழில் தொடர்பான விஷயங்களையும் முன்னேற்றம் உண்டாகும். காதலில் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய வேலைகள் முடிப்பதில் கூடுதல் கவனம் தேவை. இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக செயல்படவும். பெரிய முதலீடு, ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் காதல் உறவில் பொறுமையாக அனுசரித்து செல்லவும். உங்கள் அன்பை வெளிப்படுத்த தயங்காதீர்கள். வாழ்க்கைத் துணையுடன் விட்டுகொடுத்து செல்ல வேண்டிய நாள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பான செயல்களை முடிப்பதில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக மரியாதை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையின் அணுகுமுறை, நேர்மறையான எண்ணத்துடன் செயல்படுவது நல்லது. உங்கள் வேலைகளை முடிப்பதில் கடின உழைப்பு தேவைப்படும். சொத்து வாங்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!