இன்றைய ராசிபலன் 22.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 8, வியாழக் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் ஆயில்யம், மகம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்குச் சில கஷ்டங்கள் வரலாம். எந்த வேலையையும் முடிக்க முடியாமல் போகலாம். இதனால் உங்களுடைய மனநிலை கடினமானதாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபம், எரிச்சல் மனநிலையில் இருப்பீர்கள். மனதில் கெட்ட எண்ணங்கள் வேண்டாம். வெளியூர், வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். இதனால் அன்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியே போக திட்டம் போடலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று சில பிரச்சனைகள் வரலாம். தேவையில்லாமல் பொழுதுபோக்கிற்காக அதிக செலவு செய்வீர்கள். அதைத் தவிர்க்க வேண்டிய நாள். குழந்தைகளுடன் சந்தோஷமாக நேரம் செலவிட நேரம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முயற்சி செய்வீர்கள். அதை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். இன்று சில முக்கியமானவர்களைச் சந்திக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணைக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதால் வேலை தடைப்படலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்குப் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லபடியாக இருக்கும். உங்களுடைய சகோதரர் அல்லது சகோதரியிடம் ஆலோசனை கேட்டு வியாபாரத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கலாம். பேராசை பிடித்த கெட்டவர்களிடம் கவனமாக இருங்கள். குறிப்பாக உங்கள் முதலீடு விஷயங்களில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த முக்கிய பண பரிவர்த்தனைகள் இன்று முடியும். உடல்நிலையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. இல்லையென்றால் அது பெரிய நோயாக மாற வாய்ப்பு உண்டு. நீண்ட நாள் கழித்து பழைய நண்பரை சந்திப்பீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் சூழல் இருக்கும். ஆனால், தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். பெற்றோருடன் மனக்கசப்பு வரலாம். வீட்டில் பூஜை, புனஸ்காரம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். புது வாகனம் வாங்க நினைத்தால் கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது. இல்லையென்றால் பிரச்சனை வரலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள். மனதில் இருந்த சில எண்ணங்கள் இன்று நிறைவேறும். அதனால் சந்தோசப்படுவீர்கள். ஆனால், யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கொடுத்தால் பணம் திரும்பி வருவது கடினம். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அல்லது நல்ல பதவி கிடைப்பதால் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். சில வேலைகள் காரணமாக உங்களுடைய வழக்கமான வேலைகளை பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. அதனால் வேலையில் சரியான திட்டமிடல் அவசியம். மனதில் இருக்கும் பிரச்சனைகள் பெற்றோரின் ஆலோசனையால் தீரும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்குச் சாதகமான மற்றும் பாதகமான பலன்கள் என கலந்து கிடைக்கும். குடும்பத்தில் ஏதாவது மாற்றம் செய்ய நினைத்தால் பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். புது வியாபார திட்டங்களைத் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுடைய குழந்தை படிப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களுடைய அன்புக்குரியவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவும். குடும்பம் தொடர்பாக நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். வசதி, வாய்ப்பை அதிகரிப்பது தொடர்பான பொருட்களை வாங்குவதற்கு நிறைய பணம் செலவு செய்வீர்கள். இதனால் நிதி தொடர்பான சிக்கல் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உங்களுடைய எதிரிகள் உங்களை ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள். சமூகம் தொடர்பான வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கான பொறுப்புகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பது நல்லது. எந்த முடிவையும் யோசித்து எடுங்கள். இல்லையென்றால் தவறு நடக்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். குறிப்பாக எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட வேண்டாம். வயிறு தொடர்பான பிரச்சனை வரலாம். உங்களுடைய காதல் துணை உங்களுக்குப் பரிசு கொடுக்க வாய்ப்பு உண்டு. அதனால் உங்களிடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைக்கு ஏற்ற பொறுப்பு கிடைப்பதால் சந்தோஷப்படுவீர்கள். குடும்பத்துடன் வெளியே செல்லலாம். வீட்டில் விருந்தினர் வருவதால் செலவுகள் அதிகரிக்கலாம். ஆனால், வியாபாரத்தில் லாபம் கிடைப்பதால் சமாளிக்க முடியும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப வியாபாரத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் பெரியவர்கள் உதவியுடன் தீர்க்க முடியும். யாருக்கும் தேவையில்லாத அறிவுரை கொடுக்க வேண்டாம். அதனால் பிரச்சனை வரலாம். வியாபார விஷயங்களை வீட்டிலும் வெளியிலும் பேச வேண்டாம். மற்றவர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவதை விடுத்து, உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். அவர்களின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டிய நாள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பான முடிவெடுக்கும் விஷயங்களில் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள். இல்லையென்றால் அது பிறரின் மனம் புண்படும். எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். வியாபார சம்பந்தமாக பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். உங்களுடைய எண்ணங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பிறர் அதை தவறாகப் பயன்படுத்தலாம். உங்கள் மனக்கவலை நீங்கி நிம்மதியாக இருப்பீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சந்தோஷம் அதிகரிக்கும். பண நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும்.உங்களுடைய உடன் பிறந்தவர்கள் மூலம் பணம் தொடர்பான நன்மைகள் கிடைக்கும். உறவினர்களை சந்தித்து சந்தோஷப்படுவீர்கள். உறவுகளை பேண முயலவும். இன்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.. வீட்டில் உள்ள பெரியவர்களின் தேவைகளை சரியான நேரத்தில் நிறைவேற்ற முயலவும்.. வியாபாரம் தொடர்பாக கூட்டாளிகளின் பேச்சை கேட்டு தவறான இடத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.
மீனம் ராசி பலன்
இன்று வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய குழந்தையின் கல்விக்காக நிறைய பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று சோகத்தை தரும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் தள்ளிப் போக வாய்ப்பு உண்டு. உங்களுக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. கஷ்டமான சூழ்நிலையிலும் பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சனை வரலாம். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களுக்குத் தொல்லை கொடுக்க முயற்சி செய்யலாம். அவர்களிடம் இருந்து தள்ளி இருங்கள்.