இன்று ஆகஸ்ட் 22ம் தேதி, வெள்ளிக் கிழமை அமாவாசை நிறைந்த நாளில், லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இன்று கடக ராசியில் பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கிறார். மரண யோகம் உள்ள இன்று தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் ராசிபலன்
மேஷ ராசிக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த தடைகள் விலகும். திருமணத்திற்கான செய்திகள் தேடி வரும். இன்று உங்கள் எண்ணங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வேலை தொடர்பாக கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்க தாமதமாகும். இன்று புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்கவும்.முக்கிய முடிவுகள் எடுக்கும் போது நிதானத்தை கடைப்பிடிக்கவும்.
ரிஷபம் ராசிபலன்
ரிஷப ராசிக்கு உடல்நலம் தொடர்பாக பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு நோய் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம். வேலையில் இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலை தொடர்பாக உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். இன்று உங்கள் தொழில் தொடர்பாக சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிப்பார் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை தொடர்பாக சில தடைகள் எதிர்கொள்ள நேரிடும். மனவருத்தம் அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்றும் உங்கள் திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் அல்லது நண்பர்கள் தங்களின் பிரச்சனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
கடக ராசிபலன்
கடக ராசிக்கு வேலை தொடர்பாக நல்ல நாளாக இருக்கும். உங்கள் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். உங்கள் வேலை, தொழில் தொடர்பாக பயணம் செல்ல நேரிடும். உங்கள் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வேலை தருபவர்களுக்கு நல்ல செய்திகள் பெறுவீர்கள். இன்று வியாபாரம் தொடர்பாக முன்னேற்றம் தரும் நாளாக அமையும். மனமகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். இன்று பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அதனால் உங்களின் நிதிநிலை வலுப்படும். இன்று உங்கள் எதிரிகளை வெல்வதற்கான சூழல் சாதகமாக இருக்கும். சுற்றுலா அல்லது வேலை தொடர்பாக பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். பெற்றோரின் ஆலோசனை உங்களுக்கு உதவும். இன்று உங்கள் மனதில் உள்ள யோசனைகளை செயல்படுத்த வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வீர்கள். உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்தி கேட்கலாம். அவசரப்பட்டு, உணர்ச்சிவசத்தால் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் நண்பர்களுடன் உங்களை நினைவுகளை பேசி மகிழ்வீர்கள். இது உங்கள் மனக்கவலையைக் குறைக்கும். ஒரு வேலை தொடர்பான திட்டங்கள் நிறைவேறலாம். பங்குச்சந்தை சற்று நஷ்டத்தை தர வாய்ப்பு உண்டு.
துலாம் ராசிபலன்
துலாம் ராசிக்கு பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் உங்கள் துணையின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்.பணியிடத்தில் உங்களின் திறமையை நிரூபிக்க வேண்டிய சூழல் இருக்கும். இன்று எந்த ஒரு வேலையும் செய்தாலும் மிகவும் கவனத்துடன் முடிப்பது நல்லது. நண்பர்களிடமிருந்து சில முதலீடு திட்டங்களை பெறலாம். இன்று உங்கள் வீட்டை புதுப்பித்தல், புது வீடு வாங்குதல் போன்ற செலவுகள் ஏற்படலாம். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்கும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிகம் ராசிக்கு முன்னேற்றத்திற்கான நாளாக அமையும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிட முடியும். இன்றைய சில புதிய சொத்துக்கள் சேர வாய்ப்பு உண்டு. உங்கள் வேலை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அதனால் தேவையற்ற பிரச்சனை சந்திக்கவும் உண்டாக்கும். உங்கள் வேலைகளை நீங்களே முடிக்கும் முயற்சி செய்யவும். இன்று பயணங்கள் சில வாய்ப்பு உண்டு. பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் பிரச்சனைகள் காரணமாக கவலை அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் நினைத்த லாபத்தை பெற இயலாத சூழல் இருக்கும். அன்றாட தேவைகளை நிறைவேற்ற அதிக செலவிட நேரிடும். இன்று பயணங்கள் நல்ல பலனை தரக்கூடியதாக அமையும்.
மகர ராசி பலன்
மகர ராசிக்கு சாதகமான நாளாக இருக்கும். சில முக்கிய விஷயம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்குவீர்கள். இன்று நீங்கள் கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். இன்று உங்கள் துணையின் பரஸ்பரம் ஒத்துழைப்பு கிடைக்கும். இதனால் மனக்கவலை குறையும். இன்று யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. இன்று உங்கள் குழந்தைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசியினர் மிகவும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். எங்கள் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று யாரிடம் வாங்குவதில் ஈடுபட வேண்டாம். உங்கள் பேச்சை நிதானத்தை கடைபிடிக்கவும். அன்று மனம் மகிழ்ச்சியும் சேமிப்பு அதிகரிக்கும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
மீன ராசி பலன்
மீன ராசிக்கு கவலைகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் கவலை ஏற்படும். இன்று பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று வெளி ஆட்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது அவசியம். உங்கள் பேச்சில் இனிமையைக் கடைப்பிடித்தால் பிறரின் ஆதரவும், சில புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். இன்று உடல் நலம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.