இன்றைய ராசிபலன் 23.05. 2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 23 வெள்ளிக் கிழமை. இன்று மிதுன ராசியில் குரு மற்றும் புதன் சேரக்கூடிய சரஸ்வதி யோகம் உருவாகிறது. சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் மகம், பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும். உங்கள் காதல் துணையை அதிகமாக நேசிப்பீர்கள். திருமண வாழ்க்கையில் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினரின் உடல்நலம் கவலை தருவதாக இருக்கும். இன்று உங்களின் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். இன்று திடீர் செலவுகளுக்காக அலைய நேரிடும். நீண்ட நாட்களாக சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்தால், அதை தீர்க்க இது சரியான நேரம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். நிறைய வேலைகள் இருப்பதால் கொஞ்சம் மன அழுத்தமான சூழ்நிலையில் இருப்பீர்கள். வியாபாரம் செய்பவர்கள் இனிமையாக பேசி காரியங்களை சாதிப்பார்கள். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி பெரியவர்களிடம் பேசி தீர்வு காண்பது நல்லது. அவர்கள் மூலம் நல்ல ஆலோசனை கிடைக்க வாய்ப்பு உண்டு.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசை நிறைவேறும். பணியிடத்தில் உங்களுக்கான வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிப்பது அவசியம். குழுவாக சேர்ந்து வேலை செய்வதன் மூலம் வேலையை எளிதாக முடிக்க முடியும்.இன்று உங்களுடைய எண்ணங்களைப் பெற்றோர்களிடம் வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு. அவர்கள் மூலம் கடினமான சூழலுக்கு சரியான வழிகாட்டுதலைத் தருவார்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஏமாற்றம் தரும் நாளாக இருக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. ஏதாவது முதலீடு செய்ய நினைத்தால் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.இன்று முதலீடு, பெரிய பண பரிவர்த்தனங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து எதிர்காலத்திற்காக புதிய திட்டம் போடலாம். வீட்டில் பூஜை, சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல பணம் கிடைக்கும். படிப்பிலும் ஆன்மீகத்திலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சில வேலைகளை தள்ளிப் போட வேண்டாம். அப்படி தள்ளிப்போட்டால் பிரச்சனைகள் வரலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். யாரிடமாவது கடன் வாங்கி இருந்தால், அதை திருப்பி செலுத்த முயற்சி செய்யுங்கள். நிதிநிலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். வேலை செய்பவர்கள் பகுதி நேர வேலை செய்ய திட்டமிட்டால், அது நிறைவேறும். உங்களுடைய வேலையில் பெரிய அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பழைய நோய்கள் திரும்ப வரலாம். சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் ஏதாவது பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள், கடினமாக உழைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எந்த வேலையையும் தயக்கம் இல்லாமல் செய்வீர்கள். இன்று சொந்தங்களுக்கு பணம் கொடுக்க நேரிடலாம். உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் சில முக்கிய விஷயங்களை பற்றி பேசுவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு சமூகத்தில் வேலை செய்பவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். பணியிடத்தில் பெரிய பதவி கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் வரலாம். உங்களுடைய மனதில் இருக்கும் பிரச்சனைகளை குடும்பத்தினரிடம் வெளிப்படையாக பேச நல்ல தீர்வு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் நீங்கள் கொடுக்கக்கூடிய பொறுப்புகளை சரியாக செய்வார்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவீர்கள். வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகள் வரலாம். அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு வரலாம். அதனால் கொஞ்சம் பொறுமையாக செயல்படுவது நல்லது.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் இன்று உங்கள் பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அதே சமயம் அவர்களின் தவறான விஷயங்களுக்கு சம்மதம் சொல்ல வேண்டாம். அதனால் பின்னாளில் பிரச்சனை வரலாம். பழைய தவறுகளில் இருந்து படம் கற்றுக்கொள்வது நல்லது. வேலை மாற நினைக்கிறவர்களுக்கு வேறு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். உங்களுடைய குழந்தை மூலம் சந்தோஷமான செய்தி கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் எதையும் வற்புறுத்திக் கேட்க வேண்டாம். அப்படி கேட்டால் கருத்து வேறுபாடுகள் தான் ஏற்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் ஏதாவது கருத்து வேறுபாடுகள் வரலாம். அதில் உங்களின் ஈகோவை விடுத்து இரு பக்கமும் யோசித்து முடிவு எடுப்பது நல்லது. இன்று மன அழுத்தம் காரணமாக மனது சரியில்லாமல் போகலாம். சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்தால் அது தீரும். உங்களுடைய பெற்றோர்களுக்கு சேவை செய்வதில் நேரத்தை செலவிடுவீர்கள்.