இன்று ஆகஸ்ட் 29, ஆவணி மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சுப முகூர்த்தம் உள்ள நாளில், சந்திரனின் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று உருவாகக்கூடிய பிரம்ம யோகம் துலாம், தனுசு ராசிக்கு அற்புத பலனை தரும்.இன்று மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசி இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். அதோடு செலவுகளை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் உறவுகள் இடையே இனிமையான உரையாடல் கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் துணைக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கி தர வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் பேச்சு மற்றும் செயல்பாடுகளில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியம். பணம் தொடர்பான விஷயங்கள் நல்ல தகவல்கள் கிடைக்கும். இன்று எந்த ஒரு ரிஸ்க் எடுப்பதிலும் தவிர்ப்பது நல்லது.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். புதிய வேலையை தொடங்குவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்று தங்களின் இலக்கை அடைய அதிக அலைச்சல் ஏற்படும். இன்று உங்கள் பேச்சில் நிதானத்தையும், மரியாதை பெற முடியும். இன்று நீங்கள் பெரிய லாபத்தை பெறும் நோக்கில், அன்றாட பலம் இருக்கு விஷயங்களில் கவனம் செலுத்தாமல் விடுவீர்கள். பணியிடத்தில் உங்கள் வேலையை சரியாக செய்து முடிக்க முடியும். இன்று பிறர் உங்களை புகழ்வார்கள்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியை சேர்ந்தவர்கள் இன்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். பணியிடத்தில் உங்களை எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். இன்று நீங்கள் அளித்த வாக்குறுதியை சரியான நேரத்தில் நிறைவேற்றவும். இன்று உங்களின் கருத்துக்களை முன் வைக்க முடியும். இன்றும் உங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். சட்டம் தொடர்பான விஷயங்களை கொஞ்சம் கவனமாக இருப்பது அவசியம். இன்று எந்த வேலை செய்தாலும் அதில் மிகவும் கவனமாக பொறுமையுடன் செய்து முடிப்பது நல்லது. நீண்ட காலத்திற்கு பின்னர் உங்கள் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.
கடக ராசி பலன்
கடக ராசிக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களின் தைரியம் மற்றும் வீரியம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் பெரிய இலக்கை நிர்ணயித்து செயல்படுவது நல்லது. உங்களுக்கு பிரச்சனைகளை எளிதாக தீர்க்க முடியும். தொழில் தொடர்பான திட்டங்களையும் முழு கவனம் செலுத்த வேண்டும். இன்று பயணங்கள் செல்ல திட்டமிடுபவர்கள் கவனமாக பயணம் செய்யவும். இன்று உங்களின் முயற்சிகளில் வெற்றி பெற சிறிது காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் பணி இடத்தில் பதவி மற்றும் கௌரவம் கிடைக்கும். சில முக்கிய விவரங்களை பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பை கவனம் செலுத்த வேண்டிய நாள். இன்று அவசரமாக எந்த ஒரு வேலை செய்வது அல்லது முடிவு எடுப்பதை தவிர்க்கவும். நண்பர்களிடமிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். இன்று பணியிடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். இருக்கும் இந்த ஆன்மீக நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் பங்கேற்பார்கள். இன்று சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இன்று ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து உங்களுக்கு பணம் சேருவதற்கான மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இன்றும் உங்களின் இலக்குகளை அடைய கவனமாக செயல்பட வேண்டிய நாள். பெரிய இலக்குகளை அடைய கூட்டாக சேர்ந்து செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பழைய கடனிலிருந்து விடுபட வாய்ப்பு கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று ஆரோக்கியத்தை வெற்றி பலவீனமாக இருக்கும். இன்று எந்த விஷயத்திலும் கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்கவும். குறிப்பாக உணவு மற்றும் பயணங்கள் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. பணியிடத்தில் ஆபத்தான வேலைகளில் ஈடுபட வேண்டாம். பணியிடத்தில் நீங்கள் தரக்கூடிய ஆலோசனை வரவேற்கப்படும். உங்கள் குடும்பத்தின் சூழல் சிறப்பாக இருக்கும். உங்கள் செயல்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசிக்கு கலவையான பலன்கள் தரக்கூடிய நாளாக இருக்கும். உணவு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தவும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகள் கண்டிப்பாக செயல்படுவார்கள். சக ஊழியர்களின் உங்களைப் புகழ்வார்கள். பழைய தவறுகளால் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. இந்த குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளை கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்கு தங்கள் வணிகம் தொடர்பாக நல்ல பலன்களை கிடைக்கும். கடின உழைப்பிற்கான முழு பலனை பெறுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதை சரியாக முடிக்க முடியுமா என்ற சந்தேகம் மனதில் அதிகரிக்கும். வேலை தேடுபவர்கள், அவர்கள் நினைத்த வாய்ப்பை பெற அதற்கான திறமையை வளர்த்துக் கொள்ள முயலவும். இன்று கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
மகர ராசி பலன்
மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாளாக இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவும். இன்று பல பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. பெரியவர்களை மதித்து நடக்கவும். உங்களின் கலைத்திறன் மேம்படக்கூடிய நாள். கல்வி, விளையாட்டு போட்டியில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடும் நபர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலனை மாணவர்கள் பெறுவார்கள்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லிணக்கத்தைப் பேணுவது அவசியம். தனிப்பட்ட விஷயங்களை முழு கவனம் செலுத்துவது அவசியம். இன்று வேலை தொடர்பான பணியிட கொள்கைகளை பின்பற்றுவது அவசியம். அதில் எந்த ஒரு சமரசத்தையும் செய்ய வேண்டாம். சொத்து தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க முடியும். இன்று யாரிடத்தில் ஆணவத்துடன் பேசுவதை தவிர்க்கவும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மீன ராசி பலன்
மீன ராசி சேர்ந்தவர்கள் சமூக பணிகளில் அதிக ஈடுபாடுடன் இருப்பீர்கள். உங்கள் உறவினர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். முக்கிய வேலைகளை முடிப்பதில் உங்களுக்கு ஒருங்கிணைப்பாக இருப்பார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் பேச்சு நிதானத்தை கடைப்பிடிப்பது, உங்கள் கருத்துக்களை சரியான விதத்தில் சொல்வது நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து கவலை ஏற்படும்.