இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 மார்ச் மாதத்தில் 7.1% உயர்ந்து 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.இது பெப்ரவரி 2025 இல் 6.095 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததிலிருந்து குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுகிறது என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.இந்த உயர்வு, வெளிநாட்டு நாணய இருப்புக்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு நாணய இருப்புக்கள் பெப்ரவரியில் 6.031 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் இது மேலும் அதிகரித்து, உத்தியோகபூர்வ இருப்பு சொத்துக்களை வலுப்படுத்தியுள்ளது. இந்த இருப்பு சொத்துக்களில் சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பரிமாற்ற வசதியும் (swap facility) அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
By newsteam
0
42
Previous article
RELATED ARTICLES