Sunday, July 27, 2025
Homeஇலங்கைஇலங்கையில் 5,400க்கும் மேற்பட்ட கணினிக் குற்றங்கள் – பொலிஸாரின் எச்சரிக்கை

இலங்கையில் 5,400க்கும் மேற்பட்ட கணினிக் குற்றங்கள் – பொலிஸாரின் எச்சரிக்கை

இலங்கையில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறி வருகின்றன, இதன்படி 2025ஆம் ஆண்டில், 5400க்கும் மேற்பட்ட கணினிக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இதில் பெரும்பாலான குற்றங்கள் Facebook, WhatsApp, Instagram, Snapchat மற்றும் TikTok போன்ற சமூக ஊடக தளங்களை உள்ளடக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 90 வீதமான குற்றங்கள் Facebook உடன் இணைக்கப்பட்டுள்ளன.கணிசமான எண்ணிக்கையில் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் தவறான பயன்பாடும் இந்த குற்றங்களில் அடங்கியுள்ளன.
பொதுவான சைபர் குற்றங்களின்படி, தரவு திருட்டு, மோசடிகள் மற்றும் இணைய நிதி மோசடி ஆகியவை இடம்பெறுகின்றன.இந்தநிலையில் இலங்கையில் 70 இலட்சத்துக்கும் அதிகமான இணையப் பயனர்கள், அதுவும் சுமார் 90 வீதமானோர் சமூக ஊடகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.இதனால், இணையச் சுரண்டலுக்கான ஆபத்து அதிகமாகவே உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனைக் கருத்திற்கொண்டு பயனர்கள் கடவுச்சொற்களை ஒருபோதும் பகிர வேண்டாம் என்றும் சமூக ஊடகக் கணக்குகளில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் இலங்கையின் கணினி அவசர சேவை பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:  இன்றைய ராசி பலன் - 10-07-2025
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!