Home » இலங்கை தமிழரசு கட்சியின் அழைப்பில் நிர்வாக முடக்கல் போராட்டம்

இலங்கை தமிழரசு கட்சியின் அழைப்பில் நிர்வாக முடக்கல் போராட்டம்

by newsteam
0 comments
இலங்கை தமிழரசு கட்சியின் அழைப்பில் நிர்வாக முடக்கல் போராட்டம்

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, இன்று நண்பகல் வரை மாத்திரம் நிர்வாக முடக்கலை முன்னெடுக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பல தரப்பினரிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.எனினும், இந்த நிர்வாக முடக்கலுக்கு சில அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பல அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கான அழைப்பிற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளை தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.குறிப்பாக, ஒரு சிலரின் தன்னிச்சையான செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அந்தக் கிளை குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன், வடக்கு, கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!