Home இலங்கை உத்தரவை மீறி நீதிமன்ற வளாகத்தில் வாகனத்தை செலுத்தியமைக்கான நீதிமன்றில் முன்னிலையாக உள்ள தேசபந்து

உத்தரவை மீறி நீதிமன்ற வளாகத்தில் வாகனத்தை செலுத்தியமைக்கான நீதிமன்றில் முன்னிலையாக உள்ள தேசபந்து

0
உத்தரவை மீறி நீதிமன்ற வளாகத்தில் வாகனத்தை செலுத்தியமைக்கான நீதிமன்றில் முன்னிலையாக உள்ள தேசபந்து

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவர் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர்.பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய அவர்கள் மன்றில் முன்னிலையாகவுள்ளனர். 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.அன்றையதினம் நீதிமன்ற உத்தரவுகளை மீறி நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்துள்ளது. அதற்கமையவே, இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version