இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, மொரகெட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பாடசாலை மாணவர்களும் 56 பெற்றோர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள காணியில் இருந்த மரத்தில் உள்ள குளவி கூடு கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குளவி கொட்டுக்கு இலக்காகியவர்கள் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எம்பிலிப்பிட்டியவில் பாடசாலை மாணவர்கள் உட்பட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி
56